குளித்தலை அருகே குடும்ப தகராறு மூதாட்டி உள்பட 2 பேர் மீது தாக்குதல்: 7 பேர் மீது வழக்கு

குளித்தலை, டிச. 4: கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் நடுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மனைவி பாப்பா (77). இவர்களுக்கு சங்க பிள்ளை, முனியாண்டி ஆகிய இரண்டு மகன்களும், சரசு என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் சங்க பிள்ளை மற்றும் அவரது மகன்கள் நந்தகுமார், நவீன் ஆகியோருக்கும் பாப்பாவுக்கும் இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 29ம் தேதி அன்று துரையப்பன் என்பவரது வீட்டில் பாப்பா இருந்தபோது, அங்கு வந்த சங்க பிள்ளை, அவரது மனைவி தங்கமணி, மகன்கள் நந்தகுமார், நவீன் மற்றும் உறவினர்கள் சத்குரு, வினோத், அஜித் ஆகிய ஏழு பேரும் பாப்பாவை தகாத வார்த்தையால் திட்டி அடித்து உதைத்துள்ளனர். பின்னர் பாப்பாவின் தம்பி செல்வம் என்பவரின் வீட்டிற்கு சென்று அவரையும் தகாத வார்த்தையால் திட்டி தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த செல்வம் மற்றும் பாப்பா திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து செல்வம் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் சங்க பிள்ளை உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

More