தோகைமலையில் உரம் விலை உயர்வை கண்டித்து விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

தோகைமலை, ஏப்.23: உரம் விலை உயர்வை கண்டித்து தோகைமலையில் விவசாயிகள் சங்கம் சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடந்தது. தோகைமலை பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய பொருளாளர் முனியப்பன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், பெருமாள், சுப்பரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் இலக்குவன், மாவட்ட செயலாளர் சக்திவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் ரமேஷ், பாப்பாத்தி, சக்திவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>