தோகைமலை அருகே காணாமல் போனவர் கிணற்றில் சடலமாக மீட்பு

தோகைமலை ஏப்.18: தோகைமலை அடுத்த போத்துராத்தன்பட்டியை சேர்ந்த சின்னத்துரை என்பவரது மகன் மகேஷ்வரன் (31). கரூரில் உள்ள தனியார் டெக்சில் டைலராக வேலை பார்த்து வந்தார். கடந்த 15ம் தேதி இரவு வீட்டிலிருந்து வெளியில் சென்ற மகேஷ்வரன் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல் வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் நேற்று காலை போத்துராவுத்தன்பட்டி வி.ஏ.ஒ அலுவலகம் அருகே இருந்த உள்ள அரசு பொது கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அருகில் வசிப்பவர்கள் சென்று பார்த்துள்ளனர். கிணற்றில் ஒரு ஆண் உடல் மிதந்து உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தோகைமலை போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிரேதத்தை மீட்டு பார்த்தபோது காணாமல் போன மகேஷ்வரன் என தெரியவந்தது. பின்னர் பிரேத பரிசோதனை செய்ய குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: