பொதுமக்கள் எதிர்பார்ப்பு கொப்பரை தேங்காய் விலை சரிவு

க.பரமத்தி, ஏப்.15: கொப்பரை தேங்காய் விலை கடந்த இரு வாரங்களாக இறங்கு முகமாக உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கரூர் மற்றும் க.பரமத்தி ஆகிய இரு வெவ்வேறு ஒன்றிய பகுதிகளில் விலையும் தேங்காய்களை உடைத்து காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணை எடுத்தது போக மீதம் உள்ள பருப்பினையும், தேங்காய்களையும் அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திங்கள் தோறும் நடைபெறும் ஏலத்திற்கு கொண்டு செல்கின்றனர்.

அங்கு கொப்பரை தேங்காய்காக நடந்த ஏலத்தில் சுமார் 411 மூட்டைகளில் 19,015 அரை எடை கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. ஒரு கிலோ சராசரி விலையாக ரூ.124, ஒரு கிலோ கொப்பரை தேங்காய் முதல் ரகம் அதிக விலையாக ரூ.125 ஏலம் போனது. கடந்த வாரத்தை விட கிலோவிற்கு ரூ.4 குறைந்து ஏலம் போனதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதே போல தேங்காய்க்காக நடந்த ஏலத்திற்கு சுமார் 1,619 கிலோ எடையுள்ள 5,034 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. இதில் ஒரு கிலோ தேங்காய் விலை குறைந்த விலையாக ரூ.30, ஒரு கிலோ தேங்காய் அதிக விலையாக ரூ.36 ஏலம் போனது. கடந்த வாரத்தை விட கிலோவிற்கு ரூ.2 குறைந்து ஏலம் போனது.

Related Stories: