கரூர் ராயனூர் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி

கரூர், ஏப்.14: கரூர் ராயனூர் சாலை கலைவாணி நகர் அருகே நேற்று முன்தினம் இரவு 2 மணியளவில் கரூர் ராயனூர் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபர், கொசுவலை நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றுவிட்டு, ராயனூர் நோக்கி நடந்து சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>