பொது சிவில் சட்ட வரைவு மசோதாவை ஆராய குழு அமைப்பு: மேற்குவங்க அரசு அறிவிப்பு

கொல்கத்தா: பொது சிவில் சட்டம் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினருக்கும் திருமணம், விவாகரத்து, சொத்துரிமை, தத்தெடுப்பு மற்றும் வாரிசுரிமை போன்ற விவகாரங்களில் ஒரே மாதிரியான பொதுவான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை குறிக்கிறது. தற்போது குஜராத், உத்தரகாண்ட், அசாம் ஆகிய மாநிலங்களில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் மேற்குவங்கத்தில் தற்போது சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜ அரசு அமைந்துள்ளது. பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு கொண்டு வரப்படும் முதல் முக்கிய கொள்கை சார்ந்த சட்ட முயற்சியாக, பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கடந்த மாதம் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சுவேந்து அதிகாரி, “மேற்குவங்கத்தில் பொது சிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். இதற்கான வரைவு மசோதாவை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும்” என தெரிவித்திருந்தார். அதன்படி கடந்த 2ம் தேதி நடந்த பேரவை கூட்டத்தில், பொது சிவில் சட்ட வரைவு மசோதா பற்றி ஆராய உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பிரகாஷ் தேசாய் தலைமையில் குழு அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: