புதுடெல்லி: பிரதம மந்திரி குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் திட்டத்தின் மூலம் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் கடன் சார்ந்த மானியங்களை பெற்றுள்ளன என்று ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வான் தெரிவித்தார்.
ஒன்றிய உணவு பதப்படுத்துதல்தொழில் துறை அமைச்சர் சிராக் பஸ்வான் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 2020ல் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி உணவு பதப்படுத்துதல் மற்றும் குறு நிறுவனங்கள் திட்டத்தின் கீழ், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட குறு நிறுவனங்கள் ரூ. 20,300 கோடி ஒருங்கிணைந்த முதலீட்டில் பதப்படுத்தும் வசதிகளை அமைப்பதற்காக கடன் சார்ந்த மானியத்தை பெற்றுள்ளன.
பிரதம மந்திரியின் குறு உணவு பதப்படுத்துதல் மற்றும் குறு நிறுவனங்கள் முறைப்படுத்தல் திட்டத்தின் கீழ் இதுவரை வழங்கப்பட்ட மொத்த மானியத் தொகை சுமார் ரூ. 6,000 கோடி. 2020-ல் தொடங்கப்பட்ட இந்த திட்டம் வரும் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்துறையில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக பொருத்தமான மாற்றங்களுடன் புதிய திட்டத்தைத் தொடங்குவது குறித்து அமைச்சகம் பரிசீலித்து வருகிறது என்றார்.
