ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் டார்ஸூ பகுதியில் கடந்த 2013ம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 4 போலீசார் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் ஹிஸ்புல் முஜாஹீதீன் அமைப்பை சேர்ந்த தீவிரவாதியான இம்தியாஸ் அகமது கண்டூவுக்கு எதிராக இன்டர்போல் ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
சோப்பூரின் க்ரால்டாங் பகுதியை சேர்ந்த கண்டூ கடந்த 2010ம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீனில் தீவிர உறுப்பினராகவும், தளபதியாகவும் செயல்பட்டு வருகின்றார். தீவிரவாத நடவடிக்கைகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் இந்திய அரசு அவரை கடந்த 2022ம் ஆண்டு அக்டோபரில் குறிப்பிட்ட தனிநபர் தீவிரவாதியாக அறிவித்தது.
