ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஆட்சியை கைப்பற்ற எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.20-30 கோடி, அமைச்சர் பதவி மற்றும் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து ஆகியவற்றை பாஜ வழங்க முன்வந்ததாக முதல்வர் உமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார். காஷ்மீரில் உமர்அப்துல்லா ஆட்சி நடக்கிறது. அங்கு ஆட்சியை கைப்பற்ற பா.ஜ முயன்று வருவதாக முதல்வர் உமர்அப்துல்லா குற்றம் சாட்டி உள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில்,’ எங்கள் கட்சி எம்எல்ஏக்களை பா.ஜவில் இணைக்க சதி நடக்கிறது.
பாஜவைச் சேர்ந்த ஒரு அதிகாரியும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான ஒருவர், ஜம்முவைச் சேர்ந்த எனது எம்.எல்.ஏ. ஒருவரிடம் ஒரு மூடிய அறையில் வைத்து, நாங்கள் ரூ.20 முதல் 30 கோடி வரை தருகிறோம், ஒரு அமைச்சர் பதவி மற்றும் மாநில அந்தஸ்தையும் தருகிறோம். நீங்கள் எங்களுடன் வாருங்கள் என்று கூறினார். மக்களின் நம்பிக்கையை இவ்வளவு மலிவானதாக அவர்கள் நினைக்கிறார்களா?’ என்றார்.
