கெட்டுப்போன, காலாவதியான பொருள்கள் விநியோகம் ஸ்விகி இன்ஸ்டாமார்ட் நிறுவனத்துக்கு எப்எஸ்எஸ்ஏஐ 9 நோட்டீஸ்கள்

புதுடெல்லி: உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்(எப்எஸ்எஸ்ஏஜ) தன் எக்ஸ் பதிவில், “ ஸ்விகி இன்ஸ்டாமார்ட் விநியோகம் செய்த கைக்குழந்தைகளுக்கான உணவு பொருள் ஒன்று மிகவும் மோசமான மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் கண்டறியப்பட்டது. அதில் மாசுபட்டிருப்பதற்கான அறிகுறிகள், முறையற்ற சேமிப்பு மற்றும் கையாளுதல் முறைகள் காணப்பட்டன. அதேதயாரிப்பு திரும்ப பெறப்பட்ட பின்னரும், அது மீண்டும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்விகி இன்ஸ்டாமார்ட் மூலம் அழுகிய முட்டை, சேதமடைந்த பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இவ்வாறு ஸ்விகி இன்ஸ்டாமார்ட் மூலம் அழுகிய, கெட்டுப்போன, காலாவதியான, மாசுபட்ட மற்றும் பாதுகாப்பற்ற உணவு பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்துள்ளன.

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தவறான, செல்லாத அல்லது இல்லாத உரிம எண் பயன்படுத்தப்பட்டிருப்பதும், மேலும், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பெயர்களிலிருந்து வேறுபட்ட பெயர்களில் பட்டியலிடப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்த புகார்கள் அனுப்பப்பட்டாலும், மேல்நிலைக்கு கொண்டு செல்லப்பட்டாலும் திருப்திகரமான பதில்கள், குறை தீர்ப்பு அல்லது திருத்த நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு நுகர்வோரிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் ஸ்விகி இன்ஸ்டாமார்ட் நிறுவனத்துக்கு 9 நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதுகுறித்து விரிவான விளக்க அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.

Related Stories: