திருத்துறைப்பூண்டி, ஜூன் 15: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியக்குழு கூட்டம் விஜயா தலைமையில் நடைபெற்றது. சங்க மாவட்ட செயலாளர் ராஜா, சிபிஐ ஒன்றிய செயலாளர் ஜவகர் கலந்து கொண்டனர். விவசாய சங்க ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் எதிர்கால கடமை குறித்து பேசினார்.
கூட்டத்தில் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு ஜூன் 19, 20, 21 ஆகிய 3 நாட்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு சட்டத்தை பற்றி விழிப்புணவை ஏற்படுத்த தெரு தெருவாக மக்களிடம் துண்டறிக்கை வெளியிட்டு பிரச்சாரம் செய்ய வேண்டும். பெருந்திரள் ஆர்ப்பாட்டம் திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு வரும் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற இருக்கிறது, அதற்கு திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் இருந்து 60 வாகனங்களில் செல்வது என முடிவு செய்யப்பட்டது.
