தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு திமுக சார்பில் பாராட்டி ஊக்கப்பரிசு

 

கும்பகோணம், ஜூன் 15: திருவிடைமருதூர் எம்எல்ஏ கோவி.செழியன் ஏற்பாட்டில் திருவிடைமருதூர் ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற 104 மாணவ மாணவிகளை பாராட்டி பரிசளிப்பு விழா, கலைஞர் பாசறையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருவிடைமருதூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த 20 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 104 மாணவ, மாணவிகளை பாராட்டி முன்னாள் எம்.பி ராமலிங்கம் முன்னிலையில், எம்எல்ஏ கோவி.செழியன், உயர்கல்வியில் உச்சம் தொட்ட தமிழ்நாடு என்ற சாதனை குறிப்புகள் அடங்கிய கையேடு, கேடயம் உள்ளிட்ட ஊக்கப்பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கூகூர் அம்பிகாபதி, சுந்தர.ஜெயபால், சரவணன், பேரூர் செயலாளர் கோபாலகிருஷ்ணன், பஞ்சநாதன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கருணாநிதி, நிர்வாகிகள் முனுசாமி, செல்வகுமார், செந்தில், உதயா, தம்பி பிரபா, தினேஷ், தலைமையாசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: