பெரம்பலூர், ஜூன் 15: பெரம்பலூர் அரசு அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி பிரிவில் இரத்ததான முகாம் நடந்தது. முகாமிற்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா தலைமை வகித்தார். முகாமை பெரம்பலூர் எம்எல்ஏ சிவக்குமார் தொடங்கி வைத்தார். உதிரம் நண்பர்கள் அறக்கட்டளை குருதி ஏற்பாட்டாளர் உதிரம் நாகராஜ் முன்னிலை வகித்தார். இம்முகாமில் 77வது முறையாக தொடர் குருதி கொடையாளர் மகேஸ்குமரன் இரத்தம் கொடை வழங்கினார்.
மேலும், பெரம்பலூர் ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பார்த்திபன், ஏகம் அறக்கட்டளை முருகானந்தம், ஆல் தி சில்ட்ரன் ராமு, செங்குணம் நாகராஜ், அருள்ஜோதி நந்தகுமார் உட்பட பலர் இரத்தம் கொடை வழங்கி உதவினர். செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலக கணிணி உதவியாளர் சரிதா முதன் முறையாக இரத்தம் கொடை வழங்கி பெண் குருதி கொடையாளராக அறிமுகம் ஆனார். இரத்தம் கொடை வழங்கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் துணி பை வழங்கப்பட்டது.
