சீர்காழியில் இலவச கண் பரிசோதனை முகாம்

 

சீர்காழி, ஜூன் 15: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஜெயின் சங்க கட்டிடத்தில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், எஸ்எஸ் ஜெயின் சங்கம், சீர்காழி ஜேசிஐ கிரீன் சிட்டி ஸ்ரீ ஜகாராம்ஜி ஸ்ரீமதி சீதாதேவி நினைவாக பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தியது. இந்த முகாமில் அரவிந்த் கண் மருத்துவமனை சேர்ந்த 31 மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

இதில் கண் அறுவை சிகிச்சைக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். முகாமில் ஜெயின் சங்க நிர்வாகி கியான் சந்த், அரவிந்த் கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் பரமசிவம், பாபுலால், ரமேஷ்லால், லயன்ஸ் சக்தி வீரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: