திருச்சி, ஜூன் 15: திருச்சி மாவட்ட டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் அருகில் ஜூன் 14 ரத்ததான தினத்தை முன்னிட்டு தன்னார்வ குருதி கொடையாளருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு நாற்பத்தொரு முறை குருதிக்கொடை அளித்த மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் நீலமேகம் தலைமை வகித்தார். பதினெட்டு முறை குருதிக்கொடை வழங்கிய டீசல் பணிமனை மேற்பார்வையாளர் நாகநாதன், 14 முறை குருதிக்கொடை அளித்த டீசல் பணிமனை சீனியர் தொழில்நுட்பர் ராஜதுரை, இருபத்தாறு முறை குருதிக்கொடை அளித்த அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் உள்ளிட்டோர் தன்னலமற்ற மனிதநேய பணியை பாராட்டி அரிமா பழனி, முன்னாள் ரயில்வே சுவாமிநாதன், முத்துகுமார் உள்ளிட்டோர் பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.
