தெருக்களில் சுற்றிதிரியும் கால்நடைகளால் பொதுமக்கள் அவதி

கந்தர்வகோட்டை,ஜூன் 15: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சியில் மாரியம்மன் கோயில் தெரு, யாதவ தெரு, கோவிலூர் தெரு, உடையார் தெரு, கடைவீதிகளில் ஆடு, மாடுகள் அதிக அளவில் சுத்தி வருகிறது. குறிப்பாக மாடுகள் பொதுமக்கள் கடைகளில் பொருள்கள், காய்கறிகள் வாங்கி வாகனத்தில் வைத்து செல்லும்போது தின்று வீணாக செய்கிறது.

மேலும் சாலையில் மாடுகள் அலைவதால் வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமம் ஏற்படுகிறது. தெருகளில் குழந்தைகள் விளையாடும்போது மாடுகள் முட்டிவிடுகிறது. இதனால் பெற்றோர்கள் அச்சத்துடன் இருக்கும் நிலை உள்ளது. இதனால் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உரிமையாளர் ஆற்ற கால்நடைகளை பிடித்து கோசாலைக்கு அனுப்பவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

Related Stories: