பெரிய கோயில் கோட்டை சுவரை சுற்றி ரூ.5.5 லட்சத்தில் மின்விளக்கு

 

தஞ்சாவூர், ஜூன் 15: தஞ்சாவூர் பெரிய கோயில் கோட்டை சுவரை சுற்றி புதிதாக அமைக்கப்பட்ட நிரந்தர மின்விளக்கு அமைப்புகளை மாவட்ட கலெக்டர் ரேவதி இயக்கி துவக்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், தஞ்சைப் பெரிய கோவில் முன்புறம் உள்ள அகழி தூர்வாரப்பட்டு, தற்காலிக மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. கோட்டைச் சுவர்கள் மின்விளக்குகளின் ஒளியில் ஜொலித்த இந்த முயற்சிக்கு, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, இப்பகுதியின் அழகை மெருகேற்றும் வகையில், ரூ.5.5 லட்சம் செலவில் நிரந்தரமான புதிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த மின்விளக்கு அமைப்புகளைத் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் நித்யா, அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கார்த்திகேயன், தஞ்சாவூர் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் மனோகர், வட்டாட்சியர் சிவகுமார், சுற்றுலா அலுவலர் வரதராஜன், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் முத்துக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: