தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேரணி

 

திருத்துறைப்பூண்டி ஜூன் 15: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக திருத்துறைப்பூண்டி அண்ணா சாலையிலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி மாவட்ட துணை செயலாளர் யாசர் அரபாத் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முகமது அசாருதீன், மாவட்ட துணை தலைவர் அப்துர் ரஹ்மான், மாவட்ட துணை செயலாளர் நைனா முகமது, மாவட்ட மருத்துவர் அணி அப்துல் ரஹ்மான், மாவட்ட தொண்டரனி ஹாஜா முகைதீன், மாவட்ட மாணவரனி ராஜா முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் ஹாஜா மைதீன், மாவட்ட பொருளாளர் முஹம்மது சித்தீக் ஆகியோர் கோஷங்கள் எழுப்பினர். மாநில செயலாளர் முகமது ஒலி சிறப்புரையாற்றினார். பேரணியில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். முடிவில் மாவட்ட துனணை செயலாளர் முஹம்மது ஜவாத் நன்றி கூறினார்.

 

Related Stories: