திருச்சி, ஜூன் 15: திருச்சியில் போதை மாத்திரை விற்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர். திருச்சி கோட்டை பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் ஜூன் 13ம் தேதி போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது இபி ரோடு லூர்து சாமி பிள்ளை பூங்கா அருகே போதை மாத்திரை விற்ற கீழசிந்தாமணியை சேர்ந்த ரவுடி அபிஷேக் (23) கோட்டை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த 210 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
