பர்மிங்ஹாம்: 12 அணிகள் பங்கேற்கும் 10வது மகளிர் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் இன்று (12ம் தேதி) கோலாகலமாக தொடங்குகிறது. குருப் ஏவில் இந்தியா,பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் நெதர்லாந்துஅணிகளும், குரூப் பியில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று இரவு 11 மணிக்கும் நடக்கும் முதல் போட்டியில் இங்கிலாந்து – இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்தியா அணி முதல் போட்டியிலேயே 14ம் தேதி பாகிஸ்தானையும், 17ம்தேதி ஹெட்டிங்லியில் நெதர்லாந்துடனும், 21ம் தேதி ஓல்ட் டிராபோர்ட்டில் தென்னாப்பிரிக்காவையும், 25ம் தேதி வங்கதேசத்தையும், 28ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியையும் எதிர்கொள்கிறது. 24 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 33 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
