ஆஸ்திரேலியா ஓபன் பேட்மிண்டன் காலிறுதியில் சிந்து, தன்வி: ஆண்கள் இரட்டையர் பிரிவிலும் இந்திய ஜோடி அசத்தல்

சிட்னி: ஆஸ்திரேலியா ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து- இஷாராணி பருவா ஆகியோர் மோதினர். இதில் 22-20, 21-12 என்ற செட் கணக்கில் வென்று பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் தன்வி ஷர்மா-மால்விகா பன்சோத் ஆகியோர் மோதினர். இதில் 21-13, 21-15 என்ற செட் கணக்கில் தன்வி சர்மா வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இதேபோல், இந்தியாவின் தன்யா ஹேமந்த், தாய்லாந்தை சேர்ந்த போர்ன்பாவீ சோச்சுவோங் ஆகியோர் மோதினர்.

இதில் தாய்லாந்து வீராங்கனை 21-12, 21-15 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருணன்-அர்ஜூன் ஜோடி உடன் மோதியது. இதில் அதிரடியாக ஆடிய இந்திய ஜோடி 21-17, 21-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் ராவத், மனிஷா-ஜப்பானின் நாட்சு சைட்டோ, அகிரா கோகா ஜோடி மோதியது. இதில் 21-19, 21-18 என்ற செட் கணக்கில் வென்று ஜப்பான் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.

Related Stories: