டாக்கா: ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான கடந்த 9ம் தேதி டாக்காவில் நடந்த முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் டிஎல்எஸ் முறைப்படி வங்கதேச அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை ஒருநாள் போட்டியில் வீழ்த்தி வங்கதேசம் புதிய வரலாற்று சாதனையை படைத்தது.
ஒருநாள் தொடரில் 1-0 என கணக்கில் என்று முன்னிலை வகிக்கித்த நிலையில், 2வது ஒருநாள் டாக்காவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா ரன்னே எடுக்காமல் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த வீரர்கள் பொறுப்புடன் விளையாடினர். மார்னஸ் லபுசேன் 55, சேவியர் பார்லட் 52, ஜோஷ் இங்கிலீஸ் 34 ரன்கள் எடுத்தனர்.
42 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் தடைபட்டது. வங்கதேச தரப்பில் தஸ்கின் அகமது, முஸ்தபிசுர் ரகுமான் தலா 3 விக்கெட் எடுத்தனர். மழை தொடர்ந்து பெய்ததால், டக்வொர்த் லீவிச் முறைப்படி வங்கதேசம் வெற்றி பெற 41 ஓவரில் 192 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 35 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
வங்கதேச அணியில் சவுமியார் சர்க்கார் 42, ஷாண்டோ 41, ஹிருடோய் 40 ரன்கள் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் 2-0 என்ற கணக்கில் வங்கதேச கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது முஸ்தபிசுர் ரகுமானுக்கு அளிக்கப்பட்டது.வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
