ஒருநாள் போட்டி தரவரிசை இந்தியா நம்பர் 1

துபாய்: ஆண்கள் கிரிக்கெட் அணிக்கான ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. அதில் 118 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி 113 புள்ளிகள் பெற்று 2வது இடத்திலும், 103 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியா 3வது இடத்திலும் உள்ளது.

தென் ஆப்ரிக்கா அணி 102 புள்ளிகள் பெற்று 4வது இடத்திலும், பாகிஸ்தான் 100 புள்ளிகாள் பெற்று 5வது இடத்திலும், இலங்கை, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் முறையே 6,7,8,9,10வது இடங்களில் உள்ளன.

Related Stories: