மெக்சிகோவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் பிபா உலக கோப்பை கால்பந்து திருவிழா நாளை தொடக்கம்: பிரமாண்ட கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு

 

நியூயார்க்: 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 23வது தொடர் நாளை தொடங்குகிறது. கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இந்த தொடர் ஜூலை 19ம்தேதி வரை நடக்கிறது. மொத்தம் 48 அணிகள் பங்கேற்கின்றன. இவை தலா 4 அணிகள் என 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படுகிறது. லீக் சுற்​றின் முடி​வில், ஒவ்​வொரு குரூப்​பிலும் முதல் 2 இடங்கள் பிடிக்​கும் அணி​கள் மற்​றும் குரூப் வாரி​யாக 3ம் இடம் பெறும் 8 அணி​களும் அடுத்த சுற்​றுக்கு (ரவுண்ட் 32) தகுதி பெறும். அதன்​பின்​னர் கால், அரை, இறு​திச் சுற்​றுப் போட்​டிகள் அரங்​கேறும்.

மொத்​தம் 104 ஆட்​டம், 16 நகரங்​களில் மிக பிர​மாண்​ட​மாக அமைந்​துள்ள மைதானங்​களில் நடக்கிறது.. இறு​திப் போட்​டி அமெரிக்காவின் ஈஸ்ட் ருதர்ஃ​போர்​டில் அமைந்​துள்ள ‘மெட்​லைஃப் ஸ்டேடி​யத்​தில்’ நடைபெற உள்ளது. போட்​டிகள் இந்​திய நேரப்​படி நள்​ளிரவு 12.30 மணி, அதி​காலை 3.30 மணி, காலை 6.30 மணி, 9.30 மணி ஆகிய நேரங்​களில் நடை​பெற உள்​ளன. முதல் நாளில் 2 போட்டிகள் நடக்கிறது. இந்திய நேரப்படி நாளை நள்ளிரவு 12.30 மணிக்கு முதல் போட்டியில் ஏ குரூப்பில் இடம்பெற்றுள்ள மெக்சிகோ , தென்ஆப்ரிக்காவுடன் மோத உள்ளது. இந்த போட்டி மெக்ஸிகோ சிட்டி ஸ்டேடியத்தில் நடக்கிறது.

தொடர்ந்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு எஸ்டாடியோ குவாடலஜாரா மைதானத்தில் 2வது போட்டியில் ஏ பிரிவில் கொரியா குடியரசு-செக்கியா மோத உள்ளன. நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா ஜே பிரிவில் உள்ளது. இந்த பிரிவில் அல்ஜீரியா, ஆஸ்திரியா, ஜோர்டான் உள்ளன.அர்ஜென்டினா முதல் போட்டியில்வரும் 16ம் தேதி அல்ஜீரியாவுடன் மோதுகிறது. தொடக்க விழா 3 நகரங்களில் நடைபெற உள்ளது. மெக்சிகோவில் நாளை முதல்போட்டி தொடங்குவதற்கு 90 நிமிடங்களுக்கு முன் இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு தொடக்க விழா தொடங்குகிறது. கொலம்பியப் பாடகி ஷகிரா, பாடகர் ஜேபால்வின், நைஜீரிய பாப் பாடகர் பர்னா பாய், தென்ஆப்ரிக்க பாடகி டைலா, மெக்சிகோவின் லிலா டவுன்ஸ், அமெரிக்காவின் பெலிண்டா உள்ளிட்ட உலக இசை கலைஞர்கள் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்த இருக்கின்றனர்.

12ம் தேதி இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு கனடாவின் டொராண்டோ மைதானத்தில் 2வது தொடக்க விழா நடக்கிறது. இதில் கனடா பாடகி அலானிஸ் மோரி செட்,,பாடகர் மைக்கேல் புப்ளே, அலெசியா காரா, கனடாவை பூர்வீகமாக கொண்ட இந்திய நடிகை நோரா ஃபதேஹி ரசிகர்களை மகிழ்விக்கின்றனர். இதனை தொடர்ந்து இரவு 12.30 மணிக்கு கனடா- போஸ்னியா அணிகள் மோத உள்ளன. 3வது தொடக்க விழா வரும் 13ம் தேதி அதிகாலை 5 மணிக்கு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சோஃபி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

அமெரிக்க பாடகி கேட்டி பெர்ரி, பாடகர் ஃபியூச்சர் , தாய்லாந்து ராப் பாடகி லிசா, பிரேசிலின் அனிட்டா ஆகியோர் பங்கேற்கின்றனர். தொடர்ந்து டி பிரிவில் அமெரிக்கா-உருகுவே அணிகள் மோத உள்ளன. உலக கோப்பைக்காக ஷகீராவும் ,பர்னா பாயும் பாடி நடித்துள்ள தீம்பாடல் கடந்த 16ம்தேதி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் எந்த சேனலில் பார்க்கலாம்?
இந்தியாவில் உலக கோப்பை கால்பந்து தொடரை ஒளிபரப்புவதற்கான உரிமையை ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ரூ.320 கோடிக்கு பெற்றுள்ளது. ஜீ குழுமம் சார்பில் புதிதாக அறிமுகம் செய்துள்ள நான்கு சேனல்களில் இவை ஒளிபரப்பாக உள்ளது. அதேபோல ஜீ நிறுவனத்தின் ஜீ5 ஓடிடி தளத்திலும் காணலாம்.

இதுவரை சாம்பியன்…
உலக கோப்பை கால்பந்து தொடரில் அதிகபட்சமாக பிரேசில் 5 முறை பட்டம் வென்றுள்ளது. அடுத்ததாக ஜெர்மனி , இத்தாலி தலா 4, அர்ஜென்டினா 3, பிரான்ஸ், உருகுவே தலா 2, இங்கிலாந்து, ஸ்பெயின் தலா ஒருமுறை பட்டம் வென்றுள்ளன.

Related Stories: