சிறப்புத் திறமையாளர், நேரம் கொடுங்கள்! சூர்யவன்ஷியிடம் அதிகமாக எதிர்பார்க்க வேண்டாம்: முன்னாள் கேப்டன் கபில்தேவ் பேட்டி

 

மும்பை: அயர்லாந்து, இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடர் மற்றும் ஆசிய விளையாட்டி போட்டிக்கான இந்திய அணியில் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி இடம் பிடித்துள்ளார். ஐபிஎல்லில் அதிகரன் குவித்து ஆரஞ்ச் தொப்பியை தன்வசப்படுத்திய சூர்யவன்ஷி, ஜாம்பவான் டெண்டுல்கரை விட குறைந்த வயதில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் அளித்துள்ள பேட்டி: \”சூர்யவன்ஷி ஒரு சிறப்புத் திறமையாளர், அவருக்கு நேரம் கொடுங்கள்.

அவரிடம் உள்ள திறமையை நிச்சயமாக வெளிப்படுத்தியுள்ளார். அவர் தன்னை உடற்தகுதியுடன் வைத்திருக்க வேண்டும். தேசிய அணியில் ஒரு பகுதியாக இருக்கும்போது வேறு பல விஷயங்களும் நடக்கும். அவர் இப்போதுதான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கிளப் கிரிக்கெட் என்பது நாட்டிற்காக விளையாடுவதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது, அது ஒரு வித்தியாசமான சிந்தனை முறை என்பதை அவர் புரிந்துகொள்வார். எனவே அவருக்கு நேரம் கொடுங்கள், அதிகமாக எதிர்பார்க்க வேண்டாம், என்றார்.

முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் மதன் லால் கூறுகையில், சூர்யவன்ஷி தனது ஐபிஎல் வெற்றியை சர்வதேச அளவிலும் மீண்டும் நிகழ்த்துவார். இது அவருக்கு ஒரு மிக முக்கியமான தருணம், ஏனென்றால் அவர் 15 வயது வீரர், தனது தேர்வை அவரே கட்டாயப்படுத்தியுள்ளார். சிறப்பான ஆட்டத்தினால்தான் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரால் நிச்சயமாக அதைச் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் அவரிடம் திறமை அபரிமிதமாக உள்ளது. அவரால் ஏன் அதைச் செய்ய முடியாது? அவர் நல்ல ஃபார்மிலும் இருக்கிறார்.” என்றார்.

Related Stories: