சூப்பர் எல் நினோவை சமாளிக்க சூப்பர் பேஸ் பேக்!

நன்றி குங்குமம் தோழி

* தயிர், கற்றாழை பேஸ் மாஸ்க்: கற்றாழை ஜெல் – 4 ஸ்பூன், தயிர் – 1 ஸ்பூன். கற்றாழை ஜெல்லில் தயிர் கலந்து நன்றாக மசித்து முகத்தில் கீழிருந்து மேல் நோக்கியபடி முகம், கழுத்துப் பகுதியில் நன்றாக தடவி
20 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் கழுவவும். சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும்.

* சந்தனம் மற்றும் பன்னீர் பேஸ் மாஸ்க்: சுத்தமான சந்தனத்தூள் – 1 டீஸ்பூன், பன்னீர் – 2 டீஸ்பூன். ஒரு கிண்ணத்தில் சந்தனத்தூள், பன்னீர் கலந்து பேஸ்ட் போல் குழைத்து முகம், கழுத்துப்பகுதியில் நன்றாக தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். சந்தனம், பன்னீர் குளுமை என்பதால், வெயிலினால் சருமம் எரிச்சல் ஏற்படுவதை தடுத்து புத்துணர்ச்சியுடன் வைக்க உதவும்.

* தக்காளி, தேன் பேஸ் மாஸ்க்: தக்காளி கூழ் – 1 டீஸ்பூன், தேன் – 1 டீஸ்பூன். தக்காளி கூழ், தேன் இரண்டையும் நன்கு குழைத்து முகம், கழுத்துப் பகுதியில் நன்றாக தடவி 20 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்யவும். தொற்று சேராமல் பாதுகாத்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

* வெள்ளரி, புதினா, முல்தானிமெட்டி பேஸ் மாஸ்க்: முல்தானிமெட்டி, வெள்ளரிச் சாறு – தலா ¼ கப், புதினா பேஸ்ட் – 1 டீஸ்பூன். முல்தானிமெட்டி, வெள்ளரி, புதினா பேஸ்ட் அனைத்தையும் நன்றாகக் கலந்து முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் சுத்தமான நீரில் கழுவவும். வெள்ளரி உடலுக்கு குளிர்ச்சியையும், புதினா சருமத் தொற்றை தடுக்கும். முல்தானிமெட்டி சருமத்தின் எரிச்சலை போக்கும்.

* எலுமிச்சை, தேன் பேஸ் மாஸ்க்: எலுமிச்சைச் சாறு, தேன் – தலா 1 டேபிள் ஸ்பூன். ஒரு பவுலில் எலுமிச்சைச்சாறு, தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊறிய பின் கழுவவும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள கருமையை போக்கி பருக்கள் வராமல் தடுத்து மினுமினுப்பாக வைத்திருக்கும்.

* மஞ்சள் பேஸ் மாஸ்க்: மஞ்சள் – ½ டீஸ்பூன், தயிர் 1 டீஸ்பூன். ஒரு பவுலில் மஞ்சள் தூள், தயிர் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறிய பின் கழுவவும். மஞ்சள் முகப்பருக்களை குறைத்து இயற்கை பொலிவை அளிக்கும்.

* திரிபலா, அதிமதுரம் பேஸ் மாஸ்க்: திரிபலா – 1 டீஸ்பூன், அதிமதுரம் – ½ டீஸ்பூன், தயிர் – சிறிது. ஒரு பவுலில் திரிபலா, அதிமதுரம், தயிர் சேர்த்து பேஸ்ட் போல் கலக்கி முகத்தில் தடவி, 20 நிமிடத்திற்குப் பிறகு கழுவ வேண்டும். முகப்பரு வராமல் தடுக்கும்.

* பப்பாளி, எலுமிச்சை பேஸ் மாஸ்க்: பப்பாளி கூழ் – 1 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன். பப்பாளி கூழ், எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊறிய பின் குளிர்ந்த நீரால் கழுவவும்.

* முல்தானி மெட்டி-ரோஸ் வாட்டர் பேஸ் மாஸ்க்: முல்தானி மெட்டி- பொடி, ரோஸ் வாட்டர் – சிறிது. முல்தானி மெட்டி பொடியுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவவும். முகத்தை பொலிவுடன் வைத்திருக்கும்.

தொகுப்பு: ஆர்.அனுராதா ரவீந்திரன், ஸ்ரீ ரங்கம்

 

Related Stories: