மே மாதத்தில் உச்சம்: யுபிஐ பரிவர்த்தனை ரூ.30 லட்சம் கோடி

 

புதுடெல்லி: இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை மதிப்பு மற்றும் எண்ணிக்கை இரண்டிலும் இதுவரை இல்லாத புதிய சாதனையை எட்டி உள்ளது. இதுதொடர்பாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘மே மாதத்தில் யுபிஐ மூலம் ரூ.29.90 கோடி மதிப்பிலான 2,320 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. இது முந்தைய மாதத்தின் 2,235 கோடி பரிவர்த்தனைகள் மற்றும் ரூ.29.03 லட்சம் கோடி என்ற புள்ளிவிவரங்களை விட அதிகமாகும்.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.25.14 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் நடந்திருக்கின்றன. இத்துடன் ஒப்பிடுகையில் 19 சதவீத வளர்ச்சியை எட்டி உள்ளது. கோடைக்கால சுற்றுலா பயணங்கள், ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மற்றும் பண்டிகை கால செலவுகள் ஆகியவை பரிவர்த்தனை அதிகரிப்பிற்கு முக்கிய காரணம்’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: