புதுடெல்லி: இந்தியா, ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இந்தியா மற்றும் ஓமன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் ஓமன் நாட்டு அதிகாரிகள் அனைவரும் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதன் மூலம் இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இதன் மூலம், ஜவுளி, பொறியியல் பொருட்கள், ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் உள்ளிட்ட இந்தியாவின் ஏற்றுமதிப் பொருட்களில் 99 சதவீதத்திற்கு ஓமன் சந்தையில் வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. மறுபுறம், இந்திய நுகர்வோருக்கு ஓமன் பேரீச்சம்பழங்கள் மலிவான விலையில் கிடைக்கும்; இந்தியா தனது மொத்த வரிப் பிரிவுகளில் 77.79 சதவீதத்திற்கு (மொத்தம் 12,556 பிரிவுகள்) வரிச் சலுகைகளை வழங்கியுள்ளது.
இது ஓமனில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்பில் 94.81 சதவீதத்தை உள்ளடக்கியதாகும். ஓமன் ஏற்றுமதி செய்ய விரும்பும் பொருட்களுக்கும், இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களுக்கும், பெரும்பாலும் வரி விகித ஒதுக்கீடு அடிப்படையிலான வரித் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன;
