திரிணாமுல் கட்சியில் 2 எம்எல்ஏக்கள் நீக்கம்

 

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஷோபன்தேப் சட்டோபாத்யாயாவை எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரித்த விவகாரத்தில் போலி கையெழுத்து போடப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. போலி கையெழுத்து விவகாரம் தொடர்பாக இரண்டு திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் புகார் அளித்திருப்பதாக முதல்வர் சுவேந்து அதிகாரி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்எல்ஏக்கள் சந்திபன் சஹா மற்றும் ரிதப்ரதா பானர்ஜி ஆகியோரை நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: