புதுடெல்லி: கடந்த மே மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 3.2 சதவீதம் அதிகரித்து, ரூ.1.94 லட்சம் கோடியாக வசூலாகி உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.இது, கடந்த ஆண்டு மே மாதத்தில் வசூலான ரூ.1.88 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலை விட 3.2% அதிகம். இதில், ஒன்றிய ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி) ரூ.37,397 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி (எஸ்ஜிஎஸ்டி) ரூ. 45,143 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி) ரூ.51,990 கோடியாகவும் வசூலாகி உள்ளது.
