திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவரின் 14 வயது மகள், ல் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதேபகுதியில் உள்ள சாலையில் சிறுமி நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மாடப்பள்ளியை சேர்ந்த லட்சுமணன்(25) என்பவர், சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
சிறுமி கூச்சலிடவே ஆத்திரமடைந்த லட்சுமணன், சிறுமியின் கையை பிடித்து இழுத்து கடித்து குதறிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டாராம். காயமடைந்த சிறுமியை பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.புகாரின்படி திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிந்து லட்சுமணனை கைது செய்தனர்.
