கோவை: கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த 5 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி மே 21ல் திடீரென காணாமல் போனார். இதனை தொடர்ந்து காவல் நிலையத்தில் பெற்றோர் புகாரளித்தனர். வழக்குப் பதிந்து சிறுமியை தேடிய போலீசார் வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குளத்தில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி, கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்து, குளத்தில் வீசிவிட்டு சென்ற கொடூரம் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சிறுமி கொலை செய்யப்பட்டது தொடர்பாக இருவரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்.பி. மேற்பார்வையில் விசாரணை நடக்கும் நிலையில், குற்றவாளிகளை விரைந்து பிடிக்கக் கோரி மறியலில் ஈடுபட்டுள்ளனர். சிறுமி கொலை செய்யப்பட்டதை அடுத்து நீதிக் கேட்டு உறவினர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
