முகத்தில் மிளாகப் பொடி தூவி பெண்ணிடம் இருந்து 5 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: போலீசார் விசாரணை

நாகூர்: நாகூர் அருகே பாலக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குபேந்திரன். இவரது மனைவி குணசுந்தரி (42). குபேந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் குணசுந்தரி பாலக்காட்டில் உள்ள தனது தந்தை தியாகராஜன் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று ( 21 ம் தேதி) இரவு குணசுந்தரியின் தந்தை வீட்டு வாசலில் தூங்கினார். குணசுந்தரி வீட்டின் உள்ளே தூங்கினார். அப்போது அதிகாலை 4 மணியளவில் வீட்டின் பின் வாசல் வழியாக குணசுந்தரி இயற்கை உபாதை கழிக்க சென்றார்.

அப்போது முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் குணசுந்தரி மீது மிளாகப் பொடியை தூவி அவர் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி ஓடினர். உடனே குணசுந்தரி சத்தம் போடவே தந்தை தியாகராஜன் ஓடிவந்து பார்த்தார். மேலும் அவரது உதவியுடன் குணசுந்தரி நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடிவருகின்றனர். சம்பவ இடத்திற்கு டி எஸ்பி ராமசந்திர மூர்த்தி தலைமையிலான போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: