தேர்தல் பாதுகாப்பு, விழிப்புணர்வு கரூர் வாங்கப்பாளையம் பகுதியில் போலீசார் கொடி அணிவகுப்பு

கரூர், மார்ச்.3: கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாங்கப்பாளையம் பகுதியில் நேற்று மாலை காவலர்கள் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் தினமும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அச்சகம் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் போன்றோர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து கரூர் தொகுதிக்குட்பட்ட வாங்கப்பாளையம் செக்போஸ்ட் பகுதியில் இருந்து, நேற்று மாலை போலீசார் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.கரூர் மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் தலைமையில், ஏடிஎஸ்பி சிலம்பரசன், டிஎஸ்பி முகேஸ் ஜெயக்குமார் மற்றும் துணை ராணுவ படையினர், ஆயுதப்படை போலீசார் என 200க்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். வாங்கப்பாளையம் பகுதியில் துவங்கிய இந்த பேரணி நகரின் முக்கிய பகுதிகளின் வழியாக சென்று திருவள்ளுவர் மைதானத்தை சென்றடைந்தது.தேர்தல் பாதுகாப்பு மற்றும் மக்களிடையே விழிப்புணர்வு போன்றவற்றை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட காவல்துறை சார்பில் இந்த அணி வகுப்பு பேரணி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>