கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கூட்டத்தில் முடிவு

குளித்தலை, மார்ச்3: குளித்தலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட குழுக்கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு முருகேசன் தலைமை வகித்தார் மாவட்ட துணை செயலாளர் சண்முகம் மாவட்ட நிர்வாக குழு தலைவர் நாட்ராயன் கலந்து கொண்டனர் அப்போது இன்றைய அரசியல் சூழ்நிலை பற்றியும் வரக்கூடிய சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சி சார்பாக நிறுத்தப்படும் வேட்பாளர்களின் வெற்றிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக பாடுபடவேண்டும் தேர்தல் நிதி கூடுதலாக வசூல் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. குளித்தலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா பொறுப்பு செயலாளராக ராஜேந்திரம் செல்வம் தேர்வு செய்யப்பட்டார் என அறிவிக்கப்பட்டது. இதில் குளித்தலை வட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

Related Stories:

>