கோலாலம்பூர் டு திருச்சி வந்த பயணியிடம் ரூ.5 கோடி மதிப்பு உயர் ரக போதை பொருள் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து விமானம் நேற்று வந்தது. அப்போது அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறையின் வருவாய் புலனாய்வு இயக்கக அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதில் ஒரு பயணியின் நடவடிக்கை சந்தேகத்திற்கு இடமாக இருந்ததால் அவரை அழைத்து அவரது உடமைகளை சோதனையிட்டனர். அதில் உயர் ரக போதை பொருட்களான மெத்தபெட்டமைன் 5 கிலோ வரை இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.5 கோடியாகும். இது தொடர்பாக அந்த பயணியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.

Related Stories: