அமெரிக்கா சென்றவரின் வீட்டில் 103 பவுன் நகை கொள்ளை

 

வடலூர்: கடலூர் மாவட்டம், வடலூர் நாகேஷ் நகரைச் சேர்ந்தவர் வேலாயுதம் (70). இவரது மகன் சரவணகுமார் திருமணமாகி அமெரிக்காவில் மனைவி சுகான்யாவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சுகன்யா நிறைமாத கர்ப்பிணியானார். இதையடுத்து மருமகளை பார்ப்பதற்காக வேலாயுதம், மனைவி பாசமலருடன் கடந்த ஏப்ரல் 8ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

வீட்டின் சாவியை தம்பி மனைவி பூங்காவனத்திடம் கொடுத்துச் சென்றிருந்தார். நேற்று முன்தினம் காலை அந்த வீட்டுக்கு சென்று சுத்தம் செய்துவிட்டு சென்ற பூங்காவனம் மீண்டும் இரவு 8 மணியளவில் வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்து 103 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போய் இருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Related Stories: