உல்லாசமாக இருக்கும்போது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய், கள்ளக்காதலன்: செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்களால் சிக்கினர்

அருமனை: கன்னியாகுமரியை சேர்ந்த சிறுவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானான். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் சிதறால் வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்த லேவிதாஸ் மகன் சுனில் (38) என்பவர் சிறுவனை அழைத்து செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் சுனிலை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் சிறுவனை அழைத்து செல்லவில்லை என்றும், அவரை போன்ற வேறு சிறுவனை அழைத்து சென்றது தெரியவந்தது.

எனினும் சந்தேகத்தின்பேரில் போலீசார் சுனிலின் செல்போனை ஆய்வு செய்தனர். அதில் சுனில் ஒரு பெண்ணுடன் ஆபாசமான முறையில் இருந்த போட்டோக்கள், வீடியோக்கள் இருந்தன. மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் 10 வயதுடையை சிறுவனை கட்டாயப்படுத்தி ஆடையின்றி நிற்க வைத்து பாலியல் சீண்டல் செய்த வீடியோக்களும் இருந்தன. இதையடுத்து போலீசார் சுனிலை கைது செய்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சுனிலுடன் உல்லாசமாக இருந்தது அருமனை அருகே அம்பலக்கடை பகுதியை சேர்ந்த 35 வயது பெண் என்பதும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுவன் அந்த பெண்ணின் மகன் என்றும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் சிறுவனிடம் விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் சிறுவன் தனது தாயுடன் வசித்து வருகிறான். தந்தை வெளிநாட்டில் உள்ளார்.

இந்தநிலையில் சிறுவனின் தாய்க்கும் சுனிலுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் சுனில் அடிக்கடி அம்பலக்கடையில் உள்ள கள்ளக்காதலி வீட்டுக்கு சென்று அவளுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அப்போது வீட்டில் சிறுவனும் இருந்துள்ளான். இருவரும் உல்லாசமாக இருந்த நேரத்தில் சுனிலுக்கு வக்கிர எண்ணம் தோன்றி உள்ளது. அதாவது சிறுவனின் ஆடையை கழற்றி அவனுக்கு சுனில் பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்துள்ளார். இதற்கு சிறுவனின் தாய் உடந்தையாக இருந்து பாலியல் இச்சைக்கு துணை போயுள்ளார்.

இவர்கள் சிறுவனுக்கு செய்யும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் அவர்கள் உல்லாசமாக இருந்ததை சுனில் வீடியோ எடுத்துள்ளார். நாளுக்கு நாள் இருவரின் செயல்கள் மோசமடையவே பயந்து போன சிறுவன் வீட்டில் நடக்கும் விஷயத்தை தந்தையிடம் சொல்வேன் என கூறியுள்ளான்.

இதனால் ஆத்திரம் அடைந்த சுனில், தாயுடன் சேர்ந்து சிறுவனை கொன்று விடுவதாக மிரட்டியதாக சிறுவன் போலீசாரிடம் தெரிவித்தான். இதனை தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து சிறுவனின் தாய் மற்றும் கள்ளக்காதலன் சுனில் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சுனில் நாகர்கோவில் சிறையிலும், சிறுவனின் தாய் தக்கலையில் உள்ள பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

Related Stories: