திருமலை: நகைகடையில் துப்பாக்கி சூடு நடத்தி 180 சவரன், வைர நகைகள் கொள்ளையடித்த வடமாநில கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் உள்ள நகை கடை உள்ளது. இந்த கடையில் கடந்த 3ம் தேதி பட்டப்பகலில் 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியுடன் நுழைந்தது. அங்குள்ள ஊழியர்களை மிரட்டி துப்பாக்கி சூடு நடத்தி கடையில் இருந்த 180 சவரன் தங்க நகைகள் மற்றும் 112 காரட் வைர நகைகள் கொள்ளையடித்து சென்றனர். சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ைவத்து நடத்திய விசாரணையில் கொள்ளையில் 13 பேர் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் 3 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஜகிராசிங், பித்யூமன், மெத்தாப் கான் என்பது தெரியவந்தது. இந்த கொள்ளையில் பீகாரைச் சேர்ந்த சுபோத் சிங் முக்கிய குற்றவாளி ஆவார். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் ரூ.51 ஆயிரம் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக சுபோத் சிங் உள்பட மேலும் 10 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
