நடவடிக்கை எடுக்க கோரிக்கை இந்திய கலாச்சாரம் ஒற்றுமை

கரூர், மார்ச். 2:இந்திய கலாச்சாரம், ஒற்றுமை, சுற்றுச்சூழல், மறுகட்டமைப்பு மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வு யாத்திரை நேற்று கரூர் வந்தது. தேசிய தலைவர் சீனிவாசரெட்டி தலைமையிலான 20பேர் கொண்ட இந்த யாத்திரைக் குழு பிப்ரவரி 19ம்தேதி விஜயவாடாவில் துவங்கி, மார்ச் 31 ஹரித்துவாரில் முடிவடைகிறது. கரூர் மாவட்டத்தில் 2 நாள் பயணமாக இந்த குழுவினர் நேற்று கரூர் வந்தனர். இவர்களை தமிழ்நாடு யாத்திரை பொறுப்பாளர் கிராமியம் நாராயணன் தலைமையில் வரவேற்பு நடத்தப்பட்டது. தொடர்ந்து, கரூர் கோடங்கிப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர். பின்னர் யாத்திரை குழு பெங்களூர் புறப்பட்டுச் சென்றது.

Related Stories:

>