கோவை, மே 14: கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சியின், நகர ஊரமைப்பு துறையின் அனுமதி பெற்று அமைக்கப்பட்ட மனைப்பிரிவுகள், கோவை மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்ட பொது திறவிடங்கள், பூங்கா மற்றும் சாலை ஆகிய இடங்களில், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு சங்கங்களால் கம்பி வேலியிட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ள வேண்டும்.
அவ்வாறு ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், மாநகராட்சியால் அகற்றப்பட்டு, அதற்கான செலவினத்தை தொடர்புடைய நபர்களிடமிருந்து வசூல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், மீட்கப்பட்ட ஆக்கிரமிப்புகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
