செல்போன் பறித்த இருவர் சிக்கினர்

கோவை, மே 6: கோவை அடுத்த இருகூர் அருகே உள்ள மகாத்மா காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார். இவர், நேற்று முன்தினம் மகாத்மாகாந்தி ரோடு ஜங்ஷன் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் அவரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். உடனே ராம்குமார் சுதாரித்து கொண்டு அவர்களை விரட்டினார். அப்போது அங்கிருந்த பொதுமக்களும் அந்த வாலிபர்களை துரத்தினர்.

பொதுமக்கள் துரத்தலுக்கு பயந்து தப்பிஓடிய வாலிபர்கள் 2 பேரும் கீழே விழுந்தனர். உடனே அந்த 2 பேரையும் பொதுமக்கள் மடக்கி பிடித்து சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த அருள்பிரகாஷ் (27), கார்த்திகேயன்(28) என தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் 2 பேரையும் கைது செய்து, செல்போனை பறிமுதல் செய்தனர்.

 

Related Stories: