ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் செவிலியர் தின விழா

கோவை, மே 13: கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.  வண்ணமயமான பலூன்கள் திறந்த வானில் பறக்கவிடப்பட்டன. இது செவிலியர் சமூகத்திற்கு மனமார்ந்த நன்றியை செலுத்தும் ஒரு உணர்வுப்பூர்வமான செயலாகும். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக அனைத்து செவிலியர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வு பிணியாளர்கள் சேவையில் செவிலியர்கள் ஒவ்வொரு நாளும் வழங்கும் அயராத அர்ப்பணிப்பு மற்றும் சேவையை சிறப்பிப்பதற்காக மருத்துவமனை சார்பாக மனமார்ந்த நன்றியை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வில் எஸ்.என்.ஆர் சன்ஸ் சேரிட்டபிள் டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன், தலைமை செயல் அதிகாரி ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் ராஜகோபால் மற்றும் மருத்துவக் கண்காணிப்பாளர் உள்பட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.  மருத்துவமனையின் அனைத்து பணியாளர்களும், செவிலியர் துறையினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 

Related Stories: