பாலக்காடு,மே12:பாலக்காடு அடுத்த குணும்புரம் பேச்சியச்சன் நகரை சேரந்தவர்கள் மனோஜ்-அனு தம்பதியினர். இவர்கள் மகன் ஆதர்ஸ் (13). சிறுவன் பாலக்காடு ரயில்வே காலனியிலுள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் ஆதர்ஸ் நேற்று பாலக்காடு செட்டித்தெருவிலுள்ள தாய் மாமாவுடன், சக நண்பர்களையும் அழைத்துக் கொண்டு கல்பாத்தி ஆற்றுக்கு குளிக்க சென்றார். அப்போது கல்பாத்தி குண்டம்பலம் அருகேயுள்ள படித்துரையில் குளித்து நீச்சல் அடித்த போது ஆதர்ஸ் நீரில் மாயமானார். இந்நிலையில் அங்குள்ளவர்கள் நீரில் மூழ்கி, சிறுவனை தேடி பார்த்தும் கிடைக்காததால் பாலக்காடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துனர். பின்னர் வந்த தீயணைப்பு துறையினர் சிறுவனை மீட்டு பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆதர்ஸ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பாலக்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
