போதையில் நண்பரை கல்லால் தாக்கிய தொழிலாளி கைது

 

மேட்டுப்பாளையம், மே 8: சிறுமுகை அருகே மதுபோதையில் நண்பரை கல்லால் தாக்கிய கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
சிறுமுகையை அடுத்துள்ள காந்தவயல் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி (42). இவரது நண்பர் லிங்காபுரம் பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி (40). இருவரும் விவசாய கூலி தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து இருவரும் லிங்காபுரம் – காந்தவயல் சாலையில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது, போதை தலைக்கேறிய நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றியதில் ஒரு கட்டத்தில் வெள்ளியங்கிரி சுப்பிரமணியை அருகில் கிடந்த கல்லால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் சுப்பிரமணிக்கு தலை மற்றும் முகத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சுப்ரமணி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் இதுகுறித்து சிறுமுகை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சிறுமுகை போலீசார் வெள்ளியங்கிரியை நேற்று கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: