பெ.நா.பாளையம், மே 13: துடியலூர் அருகே தனியார் நிறுவன ஊழியரின் சொகுசு கார் திருடு போனது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணர், ஜி.என் மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன் (41). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அங்குள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் ஒரு இடத்தில் இவருக்கு சொந்தமான சொகுசு கார் ஒன்றை நிறுத்தி வைத்து இருந்தார்.
நேற்று காலை சென்று பார்த்த போது காரை காணவில்லை. அந்த காரை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. திருடு போன சொகுசு காரின் மதிப்பு ரூபாய் 10 லட்சம் ஆகும். இதுகுறித்து சுப்பிரமணி துடியலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
