கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம்

கரூர், பிப்.26: கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் குடும்பத்தினருடன் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தபால் தந்தி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ராஜேஸ்கண்ணன் தலைமை வகித்தார். எல்பிஎப் மாவட்ட செயலாளர் அப்பாசாமி, சிஐடியூ நிர்வாகி முருகேசன், எல்எல்எப் மாவட்ட அமைப்பாளர் சுடர்வளவன், சிஐடியூ நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, பத்மகாந்தன் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொண்டு பேசினர். டாஸ்மாக் கடைகளில் 18 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களை பனிவரன்முறைப்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். பாதுகாப்பான பணி நிலையை ஏற்படுத்த வேண்டும். விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும். பாதுகாப்பற்ற கடைகளை மூட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories:

>