126 பேர் கைது அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

கரூர், பிப். 24: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் பத்மாவதி தலைமை வகித்தார். விஜயலட்சுமி, கல்யாணி, புஷ்பவள்ளி உட்பட பலர் முன்னிலை வகித்தனர். சிஐடியூ மாவட்ட தலைவர் ஜீவானந்தம் கலந்து கொண்டு பேசினார். இதில், பல்வேறு சார்பு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பேசினர். சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் அறிவித்தபடி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரையும் அரசு ஊழியராக்க வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய ஒய்வூதியம் மற்றும் குடும்ப ஒய்வூதியம் வழங்க வேண்டும். பணி ஒய்வு பெறும் போது, பணிக் கொடையாக ஊழியருக்கு ரூ. 10லட்சம், உதவியாளருக்கு ரூ. 5லட்சம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தி நேற்று இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>