வேலைவாய்ப்பு வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கம்

கரூர், பிப். 24: கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை வகித்து, கண்காட்சியை துவக்கி வைத்து கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினார். மேலும், தொழிற்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தயாரிக்கப்பட்ட வழிகாட்டு கையேட்டினை மாவட்ட வருவாய் அலுவலர் வெளியிட கல்லூரி தாளாளர் பெற்றுக் கொண்டார்.

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பழனிசாமி கலந்து கொண்டு, மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலக செயல்பாடுகள் குறித்தும், தொழில்நெறி வழிகாட்டுதல் குறித்தும் பேசினார்.மாவட்ட தாட்கோ மேலாளர் முரளிதரன் கலந்து கொண்டு, ஆதி திராவிடர்களுக்கான கடனுதவி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து பேசினார். இந்த நிகழ்வில் பல்வேறு துறைகள் குறித்து அந்தந்த துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பேசினர். இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் வெர்ஜின் சிந்தியா நன்றி கூறினார்.

Related Stories:

>