பிரிட்டனில் புகையிலைப் பொருட்களை வாங்க வாழ்நாள் தடை விதிப்பு!!

பிரிட்டனில் ஜனவரி 1, 2009-க்குப் பிறகு பிறந்த யாரும் புகையிலைப் பொருட்களை வாங்க முடியாது என வாழ்நாள் தடை விதித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றியுள்ளது. வருங்கால தலைமுறையினருக்கு முழுமையான தடை விதித்து, புகை பழக்கம் இல்லாத நாடாக உருவாக பிரிட்டன் திட்டமிட்டுள்ளது. பிரிட்டனில் 17 வயது மற்றும் அதற்குக் குறைந்த வயதுடையவர்கள் சிகரெட் வாங்குவதைத் தடை செய்யும் மசோதாவுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளன.

இதன்படி, 2009-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்குக்குப் பிறகு பிறந்தவர்கள் யாரும் (தற்போது 17 வயதானவர்கள்) சிகரெட் வாங்க முடியாது. பிரிட்டனின் இந்த மசோதாவுக்கு ‘புகையிலை மற்றும் வேப்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளன. இதன்படி, 17 வயது மற்றும் அதற்குக் குறைவானவர்கள் சிகரெட் வாங்குவது தடை செய்யப்படுகிறது. மேலும், 2009 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பிறகு பிறந்த எந்த நபரும் தனது வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க முடியாது என குறிப்பிடத்தக்கது.

Related Stories: